உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போலீசை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

போலீசை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

ரிஷிவந்தியம், :பகண்டைகூட்ரோடு அருகே போதை ஆசாமி குவாட்டர் பாட்டிலால் போலீசாரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.வாணாபுரம் அடுத்த நாகல்குடி டாஸ்மாக் கடை அருகே நேற்று முன்தினம் இரவு 11:45 மணியளவில் குடி போதையில் சிலர் தகராறு செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பகண்டைகூட்ரோடு தலைமைக் காவலர் சங்கரநாராயணன், இரண்டாம் நிலை காவலர் மதன்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.அங்கு தகராறு செய்து கொண்டிருந்த பெரியபகண்டை பெரியசாமி மகன் சிவா, 24; கோவிந்தசாமி மகன் சந்தோஷ்குமார், 25; அன்பழகன் மகன் பிரசாந்த், 24; ஆகிய 3 பேரையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.அப்போது, சிவா குவாட்டர் பாட்டிலால் தாக்கியதில் சங்கரநாராயணனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடன், வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.பணியில் இருந்த போலீசாரை தாக்கியது தொடர்பாக சிவா, சந்தோஷ்குமார், பிரசாந்த் ஆகிய 3 பேர் மீதும் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப்பதிந்து, சிவாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி