மேலும் செய்திகள்
மகள் மாயம்: தாய் புகார்
19-Sep-2024
ரிஷிவந்தியம்: பாசாரில் விளைநிலத்தில் மாடு மேய்ந்தது தொடர்பாக மோதிக்கொண்டதில் இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி மகன் ராமராஜன்,36. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் கணேசன்,65, என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் உள்ளது.கடந்த 6ம் தேதி ராமராஜனுக்கு சொந்தமான மாடு கணேசனின் நிலத்தில் மேய்ந்துள்ளது. அப்போது ஏற்பட்ட பிரச்னையில் இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர்.ராமராஜன் அளித்த புகாரின் பேரில் கணேசன், அவரது மகன்கள் குப்புசாமி, ஜெய்சங்கர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். அதேபோல், மற்றொரு தரப்பை சேர்ந்த ஜெய்சங்கர் அளித்த புகாரின் பேரில், ராமராஜன், ஏழுமலை உட்பட 4 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
19-Sep-2024