உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முதியவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

முதியவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே இடம் தகராறில் முதியவரை தாக்கிய, மிரட்டிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த வேங்கைவாடியைச் சேர்ந்தவர் சம்பத், 64; இவர், தனது தந்தை நடேசனுக்கு சொந்தமான இடத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், ராஜாராம் ஆகியோர் சேர்ந்து, சம்பத்தின் தந்தை இடத்தில் பட்டா பெற்று வீடு கட்ட முயற்சித்துள்ளார். இது குறித்து கேட்ட சம்பத்தை இருவரும் சேர்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். சம்பத் கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகம், ராஜாராம் ஆகியோர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை