உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

உளுந்துார்பேட்டை : திருநாவலுார் அருகே நிலப்பிரச்னையில் பெண்ணை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்தனர். உளுந்துார்பேட்டை அடுத்த கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தொப்பையன், 47; அவரது தம்பிகள் சீனு, 45; ஏழுமலை, 40; இவர்களுக்குள் நிலம் பிரிப்பது சம்மந்தமாக கடந்த ஒரு மாதமாக பிரச்னை இருந்து வந்தது. நேற்று தொப்பையன் குடும்பத்திற்கும், சீனு குடும்பத்திற்கும் பிரச்னை ஏற்பட்டு திட்டி தாக்கி கொண்டனர். அப்போது சீனுவின் மனைவி ராசாத்தியின் தங்கையான ஜெயசித்ராவை, 40 ;தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார். உடன் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்து ஜெயசித்ரா கொடுத்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் குப்பன் மகன் அருள் பாண்டியன், 20; தொப்பையன், 47; மற்றும் இருவர் என 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து அருள்பாண்டியனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ