உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண்ணை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: பெண்ணை தாக்கிய கணவர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரை சேர்ந்தவர் மீனா, 24; இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. முதல் கணவரை விவாகரத்து செய்து, கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமனந்தலை சேர்ந்த பாண்டியன் மகன் பாரத்குமார், 23; என்பவரை கடந்த மே மாதம் 19ம் தேதி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.இதனை அறிந்த பாரத்குமார் தந்தை பாண்டியன், தாய் வள்ளி, உறவினர்கள் பிரகாஷ், மகேந்திரன் ஆகியோர் கடந்த ஜூன் 23ம் நள்ளிரவு 11 மணிக்கு சிறுவங்கூர் சென்று வீட்டிலிருந்த மீனாவை திட்டி தாக்கினர். அப்போது ஏற்பட்ட தகராறில் அவரது கணவரும் மீனாவை தாக்கினார். இது குறித்து மீனா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் கணவர் பாரத்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை