உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மணல் கடத்திய தம்பதி மீது வழக்கு

மணல் கடத்திய தம்பதி மீது வழக்கு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே மணல் கடத்திய தம்பதி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.திருக்கோவிலூர் போலீசார், நேற்று முன்தினம் மாலை, கரடி கிராமத்தில், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த, டாட்டா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 25 சாக்கு மூட்டைகளில் மணல் இருந்தது தெரிந்தது. போலீசார் விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டது, கரடி கிராமத்தைச் சேர்ந்த ராஜ் மகன் ரமேஷ், அவரது மனைவி வனஜா என தெரிய வந்தது. இருவர் மீதும் வழக்குப்பதிந்த பேலீசார், டாட்டா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !