மேலும் செய்திகள்
இரு மாணவிகள் மாயம்: போலீஸ் விசாரணை
31-Mar-2025
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மனைவியை கத்தியால் வெட்டிய கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் காலனியை சேர்ந்தவர் செந்தில் மகன் சவுந்தர், 21; இவரது மனைவி, பிரேமிளா, 18; இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில், பிரேமிளா மொபைலில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் வந்த சவுந்தர், மனைவி மீது சந்தேகம் அடைந்து, அவரை கத்தியால் தலை, முகம் மற்றும் இடது கையில் குத்தினார். இதில், பலத்த காயமடைந்த பிரேமிளா சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
31-Mar-2025