மேலும் செய்திகள்
மனை பிரச்னையில் வாலிபர் மீது தாக்குதல்
05-Sep-2025
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே பணம் தகராறில் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அரசன் மகன் ராம்குமார், 37; தனியார் நிறுவன ஊழியர். இவரது நண்பர் மணலுார் கிராமத்தைச் சேர்ந்த வேலு மகன் கனகராஜ். ராம்குமார் மகளிர் சுய உதவிக்குழு மூலம் கடந்தாண்டு 52 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 78 கிலோ முந்திரியை கனகராஜ்க்கு கடனாக வாங்கிக் கொடுத்தார். இதற்காக கனகராஜ் 20 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்தார். மீததொகை தரவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் திருநாவலுார் - கெடிலம் நதிக்கரை அருகே வந்த கனகராஜை ராம்குமார் வழிமறித்து மீதபணத்தை கேட்டபோது தகராறு ஏற்பட்டது. அப்போது, கனகராஜ் ராம்குமாரை தாக்கினார். இது குறித்து ராம்குமார் திருநாவலுார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கனகராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
05-Sep-2025