மேலும் செய்திகள்
சிறுமி கடத்தல் 3 பேர் மீது வழக்கு
22-Dec-2024
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே பெண் குழந்தையை திருமணம் செய்த நபர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், எறஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் விக்னேஷ்,27; இவர், கடந்த 2024ம் ஆண்டு அக்., மாதம், 15 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார், சிறுமியிடம் விசாரணை செய்தனர். அதில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது தெரிந்தது. இதையடுத்து, 18 வயதுக்குட்பட்ட பெண் சிறுமியை திருமணம் செய்த விக்னேஷ் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
22-Dec-2024