உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கோவில் திருவிழாவில் மோதல் 29 பேர் மீது வழக்கு பதிவு

கோவில் திருவிழாவில் மோதல் 29 பேர் மீது வழக்கு பதிவு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட சண்டையில் இரு தரப்பையும் சேர்ந்த 29 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். திருக்கோவிலுார் அடுத்த சுந்தரேசபுரம் கிராமத்தில், முருகன் கோவில் திருவிழா நடத்துவது சம்பந்தமாக ஊராட்சி துணைத் தலைவரான செந்தில், 53; க்கும் அதே ஊரைச் சேர்ந்த ஏழுமலை மகன் முத்துசாமி, 45; க்கும் இடையே முன்பிரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் பிடாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சுந்தரேசபுரம், வடமருதுார், கத்தாழந்திட்டு ஆகிய மூன்று ஊர்காரர்களிடம் செந்தில் மற்றும் அவரது தரப்பினர் வரி வசூல் செய்து திருவிழா நடத்தினர். கடந்த 1ம் தேதி அம்மன் வீதி உலா சென்றபோது, முத்துசாமி உள்ளிட்ட வரி கொடுக்காதவர்களின் வீடுகளில் தீபாராதனை வாங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முத்துசாமி அவரது மனைவி உஷா, வெங்கட்ராமன் மகன் சரவணன், 40; உள்ளிட்ட 19 பேர் சாமி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி, செந்தில் உள்ளிட்டவர்கள் மீது கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த மோதலில் செந்தில், சுப்ரமணி, 52; உள்ளிட்ட 10 பேர் முத்துசாமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறி த்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் 29 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை