உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மூதாட்டியிடம் செயின் திருட்டு

மூதாட்டியிடம் செயின் திருட்டு

திருவெண்ணெய்நல்லுார்: விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பு.மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி மங்காயி, 60; அதே கிராமத்தைச் சேர்ந்த இவரது உறவினர் ஜெயக்கொடி. இருவரும் சொந்த வேலைக்காக நேற்று உளுந்துார்பேட்டை சென்றனர். மாலை 5:30 மணிக்கு உளுந்துார்பேட்டையில் இருந்து அரசு பஸ்சில் பு.மாம்பாக்கம் கிராமத்திற்கு திரும்பினர். பஸ்சில் ஏறிய சிறிது நேரத்தில் மங்காயி கழுத்திலிருந்த 6 சவரன் தங்க செயின் மாயமானது. அதிர்ச்சியடைந்த அவர், உளுந்துார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ