உள்ளூர் செய்திகள்

தேர் திருவிழா

சங்கராபுரம்; சங்கராபுரத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. சங்கராபுரத்தில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் சங்கராபுரம் அம்பேத்கர் நகர் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனையும், பூட்டை ரோடில் உள்ள வேடியப்பர் கோவிலில் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைத்து தேரில் எழுந்தருள செய்த முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுத்தனர். விழாவிற்கான ஏற்பாட்டினை அம்பேத்கர் நகர் மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !