உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன், 12ம் தேதி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., ரஜத்சதுர்வேதி தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன். பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன், குழந்தை தொழிலாளர் முறையை அகற்றிட விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இதில், தனி பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர். அதேபோல, கள்ளக்குறிச்சி, சி.இ.ஓ., அலுவலக வளாகத்திலும், உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில்,சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில் அலுவலக பணியாளர்கள் பலர் உறுதிமொழி ஏற்றனர். மேலும், சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர். உதவி தலைமையாசிரியர் மதிவாணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை