குழந்தைகள் பாதுகாப்பு : கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மீளாய்வு கூட்டம் நடந்தது.மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் தொடர்ச்சியாக போக்சோ, சிறார் நீதி, குடும்ப வன்முறை சட்டம் மற்றும் குழந்தை நலக்குழு மாதாந்திர மீளாய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில், ஒவ்வொரு மாதமும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சிறப்பு கூட்டத்தைக் கூட்டுதல், வழக்கு விசாரணை, குற்றங்களை குறைத்தல் மற்றும் தடுத்தல் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த விவகாரங்களில் அதிக முக்கியத்துவம் அளித்து, தொடர்புடைய துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற கலெக்டர் அறிவுறுத்தினார்.கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.