கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை விழா துவக்கம்
உளுந்துார்பேட்டை; கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில், சித்திரை திருவிழா நேற்று துவங்கியது. இதில் கூவாகம், தொட்டி, நத்தம், வேலுார், அண்ணாநகர், கொரட்டூர், சிவலியாங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் கூழ் குடங்களுடன் ஊர்வலமாக வந்து கோவிலில் படையலிட்டு வழிபட்டனர். இன்று (30ம் தேதி) பந்தலடியில் தாலி கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, நாள்தோறும் மகாபாரத நிகழ்ச்சிகளும், இரவு சுவாமி புறப்பாடும் நடக்கிறது. வரும், 13ம் தேதி இரவு திருநங்கைகள், பக்தர்கள் திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 14ம் தேதி காலை 6:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. வரும்,16ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.