உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஒத்திவைப்பு

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மற்றும் ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதிகளில் நடைபெற இருந்த 'மக்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாம்கள் நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக தற்போது, 'மக்களுடன் முதல்வர்' திட்ட மூன்றாம் கட்ட முகாம்கள் சட்டசபை தொகுதி வாரியாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது.அதன்படி கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் இன்று 10 மற்றும் நாளை 11ம் தேதியும் மற்றும் ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் 13 மற்றும் 14ம் தேதியும் நடப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களால் 10, 11, 13, 14 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதிகளில் நடைபெற இருந்த மக்களுடன் முதல்வர் திட்ட மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முகாம்கள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி