/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தகவல்
அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தகவல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று(1ம் தேதி) கிராமசபை கூட்டம் நடக்கவுள்ளது. இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 412 ஊராட்சிகளிலும் இன்று 1ம் தேதி காலை 11:00 மணிக்கு, கிராம சபைக் கூட்டம் நடக்கவுள்ளது. கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்கவுள்ளனர். எனவே, கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் உள்ளது.