உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கால்நடை திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தல்

கால்நடை திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால்நடை திட்டங்கள் குறித்து, கால்நடை வளர்ப்போர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.கால்நடை மருத்துவமனை மற்றும் மருந்தகங்களில் பணிபுரியும் உதவி மருத்துவர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி உதவி மருத்துவர்களின் பணி நேரம், சிகிச்சை முறைகள், பணித் திறன், கால்நடைகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை விபரம் குறித்து கேட்டறிந்தார்.மருந்தகங்களில் கால்நடைகளுக்கு தொடர்ந்து சிறப்பான சிகிச்சை அளித்து கால்நடை வளர்ப்போருக்கு துணை புரிவதுடன், செயல்படுத்தப்பட்டு வரும் கால்நடை தொடர்பான திட்டங்கள் குறித்து, கால்நடை வளர்ப்போர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உதவி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதோடு மட்டுமல்லாமல் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்களுக்கு லாபம் ஈட்டக்கூடிய வழிமுறைகள் குறித்து விளக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.கூட்டத்தில் கால்நடைத் துறை இணை இயக்குநர் மோகன், உதவி இயக்குநர்கள் சுதா, பாலசுப்ரமணியன், முதன்மை மருத்துவர் கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை