மேலும் செய்திகள்
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
18-Oct-2025
சங்கராபுரம்: தேசிய அளவிலான விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்ற பள்ளி மாணவிக்கு சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் பாராட்டு விழா நடந்தது. குண்டு எறிதல் மற்றும் தட்டு எறிதல் போட்டிகளில் தமிழக அளவில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற தனியார் பள்ளி பிளஸ் 1 மாணவி நித்திஸ்வரிக்கு பாராட்டு விழா, சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் நடந்தது. மன்ற பொருளர் முத்துகருப்பன் தலைமை தாங்கினார். ஓய்வு அலுவலர் சங்க செயலர் மதியழகன், மன்ற செயலர் ராதாகிருஷ்ணன், இளைஞர் அணி சந்திரசேகரன், பாலப்பட்டு தலைமை ஆசிரியர் வெங்கடேசன், இளையாப்பிள்ளை, ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கை திருக்குறள் பேரவை செயலர் லட்சுமதிபதி வரவேற்றார். ஓய்வு அலுவலர் சங்கம் பொருளாளர் ராஜேந்திரன், சவுந்தராஜன், தமிழ் படைப்பாளர் சங்க செயலர் சக்திவேல், ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்றம் விஜயகுமார் ஆகியோர் மாணவியை பாராட்டி பேசினர். அமைப்பாளர் பாமா லட்சுமிபதி நன்றி கூறினார்.
18-Oct-2025