மேலும் செய்திகள்
சமுதாய வளைகாப்பு
23-Feb-2025
வளை காப்பு விழா
12-Mar-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த வாணியந்தல் கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் பிரியதர்ஷினி வரவேற்றார். உதயசூரியன் எம்.எல்.ஏ., 75 கர்ப்பிணிகளுக்கு புடவை, குங்குமம், மஞ்சள், வளையல், பழங்கள் உள்ளிட்டவை அடங்கிய சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.துணை பி.டி.ஓ., ஷபி, ஊராட்சி தலைவர் சிங்காரம், துணைத் தலைவர் மணிவண்ணன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் ராணி, செல்வி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்.
23-Feb-2025
12-Mar-2025