உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி ..

குப்பையால் துர்நாற்றம்கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பைபாஸ் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். பாலாஜி, கள்ளக்குறிச்சி .பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றங்கரையோரம் உள்ள சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர். பிரசாந்த், கள்ளக்குறிச்சி ஏரியில் மண் திருட்டுதியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் பெரிய ஏரியில் விடிய விடிய கிராவல் மண் திருடப்பட்டு வருகிறது. அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து தடுக்க வேண்டும்.ராஜா, தியாகதுருகம்.நாய்கள் தொல்லைசங்கராபுரம் நகர பகுதியில் சுற்றி திரியும் அதிகளவிலான நாய்கள் சாலையில் நடந்த செல்லும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்களை அவ்வப்போது கடித்து அச்சுருத்தி வருவதால் பீதியடைந்து உள்ளனர். அறிவழகன், சங்கராபுரம் .ஆற்றில் மணல் கொள்ளைகல்வராயன்மலையில் உள்ள புதுப்பாலப்பட்டு, மோட்டாம்பட்டி ஆகிய கிராமத்தில் உள்ள மணி ஆற்றில் கள்ளத்தனமாக மணல் கொள்ளை நடந்து வருகிறது. கோவிந்தசாமி, மோட்டாம்பட்டி.சுடுகாட்டு ஆக்கிரமிப்புபுகைப்பட்டி சுடுகாட்டு இடத்தை ஆக்கிரமித்துள்ளதால் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கண்ணன், புகைப்பட்டி.கழிவு நீர் தேக்கம்மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் நுழைவாயில் அருகே கழிவு நீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.சண்முகம், புதுப்பட்டு.சுகாதார சீர்கேடுமூங்கில்துறைப்பட்டு நான்கு முனை சந்திப்பில் தண்ணீர் தொட்டி அருகே குப்பைத் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.சுதாகர், மூங்கிப்துறைப்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை