புகார்பெட்டி கள்ளக்குறிச்சி
மின் விளக்குகள் இல்லாததால் அச்சம்
கள்ளக்குறிச்சி அடுத்த அணைகரைக்கோட்டாலம் காட்டுகொட்டாய் பகுதியில் தெரு மின்விளக்குகள் இல்லாததால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். -தயஸ்ரீ, அணைகரைக்கோட்டாலம். குண்டும் குழியுமான சாலைகள்
வாணாபுரம் அடுத்த எகால் கிராமத்தில் இருந்து பொற்பாலம்பட்டு வழியாக பெரியபகண்டை கிராமத்திற்கு செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. -நடேசன், எகால். புதிய நிழற்குடை அமைக்கப்படுமா?
வாணாபுரம் அடுத்த அய்யனார்பாளையம் கிராமத்தில், பழுதடைந்த பஸ் நிழற்குடை கட்டடம் இடிக்கப்பட்ட நிலையில் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சின்னசாமி, அய்யனார்பாளையம்.