மேலும் செய்திகள்
த.மா.கா., உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்
19-Nov-2024
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாவட்ட காங்., சார்பில் வட்டார, நகர தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் தேவராஜ், முன்னாள் மாவட்ட தலைவர்கள் தனபால், இளையராஜா, வீரமுத்து முன்னிலை வகித்தனர். நகர தலைவர் குமார் வரவேற்றார். மாவட்டத்தின் மேலிட பார்வையாளர்கள் பெரியசாமி, அனையரசு, தயானந்தம் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளிலும் கிராம காங்., கமிட்டிகளை மறுசீரமைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும். கிராம காங்., கமிட்டி அமைத்து, 25 புதிய நிர்வாகிகள் நியமிக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.வட்டார தலைவர்கள் பெரியசாமி, கிருபானந்தம், தனபால், சர்குருநாதன், நகர தலைவர்கள் ஏழுமலை, கமுருதீன், பிற அணி மாவட்ட தலைவர்கள் கலியமூர்த்தி, பெரியசாமி, கண்ணன், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
19-Nov-2024