மேலும் செய்திகள்
பாலசுப்பிரமணியர் கோவிலில் ஐப்பசி கிருத்திகை விழா
15 hour(s) ago
பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் கைது
15 hour(s) ago
கார் டிரைவர் தற்கொலை
15 hour(s) ago
பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்
15 hour(s) ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாவட்ட காங்., சார்பில், அசாம் மாநில அரசு மற்றும் பா.ஜ., வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, காங்., மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் தனபால், சரண்ராஜ், அசோக், இளைஞர் காங்., மாவட்ட தலைவர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் குமார் வரவேற்றார். காங்., தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை நடத்தி வருகிறார்.அதில், அசாம் மாநிலம், பர்டுரா பகுதியில் உள்ள சங்கர்தேவ் ஜன்மஸ்தான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய ராகுல்காந்திக்கு நேற்று அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன் ராகுல்காந்தியை பின்தொடர்ந்து சென்ற காங்., கட்சி நிர்வாகிகளின் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடந்துள்ளது. கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுத்த அசாம் மாநில அரசு மற்றும் கார் மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.,வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வீரமுத்து, இளவரசன், நகராட்சி கவுன்சிலர் தேவராஜ் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago