உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளச்சாராய வழக்கில் கைதான 23 பேருக்கு காவல் நீட்டிப்பு

கள்ளச்சாராய வழக்கில் கைதான 23 பேருக்கு காவல் நீட்டிப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 23 பேரின் நீதிமன்ற காவல் வரும் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் இறந்தனர்.இவ்வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் 24 பேரை கைது செய்தனர்.இதில் ஒருவருக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ், இவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதிரன், ஷாகுல்அமீது, ராமர், அய்யாசாமி, தெய்வீகன், வேலு உட்பட 23 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது.தொடர்ந்து கடலுார் மத்திய சிறையில் உள்ள 23 பேரையும் காணொலி காட்சி மூலம் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, 23 பேரின் நீதிமன்ற காவலை வரும் 19ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை