உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / எலவனாசூர்கோட்டை கூட்டுறவு சங்கத்தில் வாடிக்கையாளர்கள் திரண்டதால் பரபரப்பு

எலவனாசூர்கோட்டை கூட்டுறவு சங்கத்தில் வாடிக்கையாளர்கள் திரண்டதால் பரபரப்பு

உளுந்துார்பேட்டை : எலவனாசூர்கோட்டையில் கூட்டுறவு சங்கத்தில், காசாளர் மோசடி செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், வாடிக்கையாளர்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டையில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இங்கு, வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து பணம் குறைவதாக எழுந்த புகாரில், அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, காசாளராக பணிபுரிந்த பகண்டை கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த அமாவாசை, 57; என்பவர், வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் இருந்து போலியாக கையெழுத்திட்டு 50 லட்சம் ரூபாய்க்கும் மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 24ம் தேதி அமாவாசை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வரும் நிலையில், சங்கத்தில் நேற்று, காசாளர் அமாவாசையிடம் வாடிக்கையாளர்கள் பணமோ, கடன் தொகையையோ கொடுக்க வேண்டாம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.இதனை அறிந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கு திரண்டதால் பரபரப்பு நிலவியது. எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி