மகள் மாயம்: தந்தை புகார்
சின்னசேலம்; மேல்நாரியப்பனுாரில் மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.சங்கராபுரம் அடுத்த நுாரோலையைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் சந்தியா, 17; இவர் மேல்நாரியப்பனுார் கிராமத்தில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி சின்னசேலத்தில் தையல் பயிற்சி பயின்று வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 11ம் தேதி மாலை 4:00 மணி அளவில் தையல் பயிற்சிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.இதுகுறித்து ஏழுமலை அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.