மேலும் செய்திகள்
மாணவி மாயம் போலீஸ் விசாரணை
25-Oct-2025
ரிஷிவந்தியம்: வாணாபுரம் அருகே மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார். வாணாபுரம் தாலுகா, பீ.தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிச்சந்திரன் மகள் பிரியதர்ஷினி, 17; பிளஸ் 2 படித்துவிட்டு, லா.கூடலுாரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 23ம் தேதி இயற்கை உபாதைக்காக வெளியே சென்ற பிரியதர்ஷினி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது தாய் வசந்தி அளித்த புகாரின் பேரில், பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
25-Oct-2025