உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விவசாயிகள் அடையாள எண் பதிவு வரும் 31ம் தேதி வரை அவகாசம்

விவசாயிகள் அடையாள எண் பதிவு வரும் 31ம் தேதி வரை அவகாசம்

கள்ளக்குறிச்சி: விவசாயிகளுக்கு தனி அடையாள எண்கள் பதிவு செய்ய ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வேளாண் இயக்குனர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் திட்டத்தில் மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து விவசாயிகளுக்கும், ஆதார் எண் போன்ற தனித்துவமான அடையாள எண் வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசின் அனைத்து மானியங்களும் அடையாள எண்ணின் அடிப்படையில் வழங்கப்படும். பி.எம்.கிசான் திட்டத்தில் கவுரவ ஊக்கத்தொகை பெற அடையாள எண் அவசியம். அடையாள எண்கள் வழங்கும் முகாம் கடந்த பிப்.10 முதல் அனைத்து கிராமங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 98,328 விவசாயிகளுக்கு மேல் அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து பொது சேவை மையங்களிலும் இலவசமாக விவசாயிகளின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு அடையாள எண் வழங்கப்படுகிறது. அடையாள எண் பெறாத விவசாயிகள் ஆதார் நகல், நில ஆவணங்கள் நகல்கள் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொது சேவை மையம், கிராமங்களில் முகாம் நடைபெறும் இடங்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு மேற்கொள்ள வரும் 31ம் தேதி கடைசி நாள். இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி