கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி விண்ணப்பிக்க அவகாசம்
கள்ளக்குறிச்சி: விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், அஞ்சல் வழி பட்டய பயிற்சியில் சேருவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2024-25ம் ஆண்டிற்கான அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி துவங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் சேருவதற்கான கால அவகாசம் வரும், ஜூன் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு, டிப்ளமோ, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்த பணியாளர்கள் மற்றும் 17 வயது நிரம்பியவர்கள், இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.www.tncu.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கட்டணமாக ரூ.100 ஆன்லைனில், செலுத்த வேண்டும். நேரடியாகவும், தபால் மூலமாகவும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. இந்த பயிற்சிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ.20,750. மேலும் விபரங்களை கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் 94425 6330 மற்றும் 04146 259467 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.