உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை! வாணாபுரம் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தல்

ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை! வாணாபுரம் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தல்

வாணாபுரத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர். இங்கு, நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை மேற்கொள்ள 5 படுக்கைகளும், மகப்பேறுக்காக வரும் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க 10 படுக்கைகளும் உள்ளது. ஒரு டாக்டர், 5 செவிலியர்கள் என மொத்தமாக 11 பேர் பணியில் உள்ளனர். சுற்று வட்டார 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் காய்ச்சல், உடல்வலி, சளி, சர்க்கரை, இரத்தகொதிப்பு, விபத்தால் ஏற்படும் காயம் உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு சிகிச்சை பெறவும், மாதாந்திர பரிசோதனைக்காக கர்ப்பிணி பெண்களும் இங்கு வருகின்றனர்.ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 டாக்டர்கள் பணியிடம் உள்ள நிலையில், தற்போது ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். 4 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு டாக்டர் பணியிடம் காலியாகவே உள்ளது. இதனால், மாலை மற்றும் இரவு நேரத்தில் விபத்தினால் ஏற்படும் காயம் உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு வருபவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்க முடிவதில்லை. அங்கு முதலுதவி மட்டும் செய்து, சங்கராபுரம் அல்லது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.குறிப்பாக, இரவு நேரத்தில் பிரசவ வலியால் வரும் கர்ப்பிணி பெண்களும் வேறு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுவது தொடர் கதையாக உள்ளது. இதனால், பொதுமக்கள் பலர் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். தாலுகாவாக உள்ள வாணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல ஆண்டுகளாக டாக்டர் பணியிடம் காலியாக இருப்பதால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். டாக்டர் மற்றும் செவிலியர் குடியிருப்புகளும் இடிந்துள்ளன. மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் சுப்மணியன் இரண்டு முறை இங்கு ஆய்வு செய்தது குறிப்பிடதக்கது.எனவே, வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள டாக்டர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். மேலும், தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தி, கூடுதல் படுக்கை வசதிகள், இயன்முறை மருத்துவ பிரிவு, இரத்த வங்கி, சித்த மருத்துவ பிரிவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை