உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குப்பையில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவு 

குப்பையில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவு 

கள்ளக்குறிச்சி; கடலுாரில் குப்பை வண்டியில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகள் உரியவர்களிடம் வழங்கப்பட்டது. கடலுார், மஞ்சக்குப்பம் புல்லுக்கடை சந்தில் குப்பை வண்டியில் 47 வாக்காளர் அடையாள அட்டைகள், 80 மை பாட்டில்கள், 10க்கும் மேற்பட்ட சீல், ரப்பர் ஸ்டாம்பு, முத்திரைகள், பேட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் நேற்று முன்தினம் கிடந்தது. தாசில்தார் மகேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அதில் வாக்காளர் அடையாள அட்டைகள் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகாவிற்குட்பட்ட செம்பராம்பட்டு, பாச்சேரி, கள்ளிப்பட்டு பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்குரியது என தெரிந்தது. இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கலெக்டர் பிரசாந்த் உத்தரவின்பேரில் கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., லுார்துசாமி மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் கடலுார் சென்று வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்கள் பெற்று வந்தனர். இதனையடுத்து மை உள்ளிட்ட பொருட்கள் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறையில் பத்திரமாக வைக்கப்பட்டது. மேலும் வாக்காளர் அடையாள அட்டையை சம்மந்தப்பட்டவர்களிடம் வழங்க தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து அந்தந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் அடையாள அட்டை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக சங்கராபுரம் தேர்தல் பிரிவு அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை