திருக்கோவிலுாரில் ஏசி வசதியுடன் தேவி முருகன் மஹால், மினி மஹால்
திருக்கோவிலுாரில் அனைத்து சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் பிரம்மாண்டமான பார்க்கிங் மற்றும் 'ஏசி' வசதியுடன் கூடிய தேவி முருகன் மினி மஹால், தேவி முருகன் மஹால் அமைக்கப்பட்டுள்ளது. உரிமையாளரும், திருக்கோவிலுார் நகர மன்ற தலைவருமான முருகன் கூறியதாவது: திருக்கோவிலுாரில், திருமணம், நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்ற வகையில் செவலை ரோட்டில், 87 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், தேவி முருகன் மஹால், தேவி முருகன் மினி ஹால், தேவி முருகன் ரெசிடென்சி என 'ஏசி' வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. கால மாற்றத்திற்கு ஏற்ப மிக விரைவாக சமையல் செய்ய ஏற்ற வகையில், மஹால் மற்றும் மினி மஹாலில் நவீன சமயல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 7000 பேருக்கு உணவு சமைக்க முடியும். சைவம், அசைவத்திற்கு தனித்தனி சமையலறைகள், போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் 200க்கும் மேற்பட்ட கார்கள், 2000க்கும் மேற்பட்ட பைக்குகள் நிறுத்துவதற்கு வசதியாக பார்க்கிங் வசதியும் உள்ளது. முதல் மாடியில் உள்ள விழா அரங்கிற்கு நேரடியாக கார் செல்லும். மஹால், மினி மஹால் அமைந்துள்ள வளாகத்திலேயே 20 தங்கும் நவீன அறைகள் 'ஏசி' வசதியுடன் இருப்பதால் விழாவிற்கு வரும் உறவினர்கள் திருமண மண்டப வளாகத்திற்குள்ளேயே தங்கலாம். தினசரி வாடகைக்கும் அறைகள் வழங்கப்படுகிறது. அத்துடன் சிறிய அளவில் காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வசதியாக மினி ஹாலும் உள்ளது. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகப்பெரிய, பிரம்மாண்டமான, அதிநவீன வசதிகள் கொண்ட திருமண மண்டபமாக இது இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இவ்வாறு முருகன் கூறினார்.