உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பேரிடர் மீட்பு விழிப்புணர்வு முகாம்

பேரிடர் மீட்பு விழிப்புணர்வு முகாம்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியில், பேரிடர் மீட்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி முதல்வர் அருள் வரவேற்றார். தாளாளர் சுனில் குமார் தலைமை தாங்கினார். தேசிய பேரிடர் மீட்பு குழு இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான குழுவினர் பேரிடர் காலங்களில் தற்காப்பு நடவடிக்கை மற்றும் முதலுதவி குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்க பயிற்சி அளித்தனர். பள்ளி துணை முதல்வர் ஞானசேகரன், திருக்கோவிலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் நாகேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ