கடை உரிமையாளர்களிடையே தகராறு: 2 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் தகராறில் இரு கடைகளின் உரிமையாளர்கள் மீது மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அருகே உள்ள எலக்ட்ரீக்கல் கடையின் உரிமையாளர் மூசா,53; இவரிடம் நீலமங்கலம் சேர்ந்த கம்ப்யூட்டர் கடை வைத்திருக்கும் முகமதுயாசீன்,45; என்பவர் கடந்த 3 மாதத்திற்கு யூபிஎஸ்., பேட்டரி வாங்கியுள்ளார். அதற்கான பணத்தை முகமதுயாசீன் சிறுக சிறுக கொடுத்து வந்ததால், பேட்டரிக்கான வாரண்டி கார்டை கொடுக்காமல் இருந்துள்ளார்.இந்நிலையில் முகமதுயாசீன் பேட்டரியில் அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும், அதனை சீரமைத்து தருமாறு மூசாவிடம் வாரண்டி கார்டினை கேட்டு வந்துள்ளார். கடந்த 2 ம் தேதி மாலை 4.30 மணிக்கு முகமதுயாசீனுக்கும், கடையின் உரிமையாளர் மூசாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இது குறித்து இருவரும் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் முகமதுயாசீன், மூசா ஆகியோர் மீது தனி தனியாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.