உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்  

மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்  

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழுவின் சாதாரண கூட்டம் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட துணை சேர்மன் தங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலர் (பொறுப்பு) தண்ட பாணி வரவேற்றார். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியில் புறவழிச்சாலை பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைத்திட ஆணையிட்டு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதற்கு, தமிழ க முதல்வர் ஸ்டாலின், பொதுப்பணி துறை அமைச்சர் வேலு ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அனைத்து மாவட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். உதவியாளர் ம ணிமொழி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !