மேலும் செய்திகள்
அரசின் சாதனை விளக்க கூட்டம்
27-Jun-2025
கள்ளக்குறிச்சி; கனியாமூரில் தி.மு.க., சார்பில் 4 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.சின்னசேலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் கனியாமூரில் நடந்த கூட்டத்திற்கு, தி.மு.க., ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெகன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் தங்கவேல், வழக்கறிஞர் சங்க தலைவர் சேகர், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் எழில் வசந்தன், வெங்கடேசன், மணிபாரதி முன்னிலை வகித்தனர். தனவேல் வரவேற்றார். கூட்டத்தில், ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி, தலைமை கழக பேச்சாளர் நாகநந்தினி, கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் தாகப்பிள்ளை பங்கேற்று சிறப்புரையாற்றினர்.கடந்த 4 ஆண்டுகளில் தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனை திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர். கூட்டத்தில், ஒன்றிய நிர்வாகிகள் சோலைமுத்து, கண்ட்ரோஸ், தமிழ்செல்வி கோவிந்தன், நிர்வாகிகள் முருகேசன், சுதாமணிகண்டன், தினேஷ், தமிழ்மணி, ராஜேஸ்வரி, ராஜா, ராஜீவ்காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். துணை அமைப்பாளர் எழிலரசன் நன்றி கூறினார்.
27-Jun-2025