உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தி.மு.க., பாக முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம்

தி.மு.க., பாக முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம்

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் தொகுதி தி.மு.க., இளைஞரணி சார்பில் பாக முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது. தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக் முன்னிலை வகித்தார். தொகுதிக்கு உட்பட்ட இளைஞர் அணி பாக முகவர்கள் பலரும் கலந்து கொண்டனர். செய்தி தொடர்பு குழு துணைச் செயலாளர்கள் சூரியா, கிருஷ்ணா, மூர்த்தி, சமூக வலைதள பயிற்சியாளர்கள் விக்னேஷ், ஆனந்த் ஆகியோர் பாக முகவர்களுக்கு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் மாவட்டத் துணை செயலாளர் முருகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் அன்பு, பாலாஜி, கில்பர்ட் ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் பாலமுருகன், நிர்மல்ராஜ், அய்யப்பன், வழக்கறிஞர் கார்த்திகேயன், நகர அமைப்பாளர்கள் நவநீதகிருஷ்ணன், சுரேஷ், தினகரன் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ