உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தி.மு.க., பாக முகவர்கள் கூட்டம்

தி.மு.க., பாக முகவர்கள் கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட தி.மு.க., பாக முகவர்களுக்கான சிறப்பு செயற்குழு கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட கிளை செயலாளர்கள், பாக முகவர்கள் மற்றும் டிஜிட்டல் பாக முகவர்களுக்கான சிறப்பு செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி வி.ஏ.எஸ்., திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். நகர செயலாளர் சுப்ராயலு, தலைமை செயற்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட துணை செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் வரவேற்றார். கூட்டத்தில் தொகுதி தேர்தல் பணிக்குழு செயலாளர் தாமரைக்கண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார். வரும் 2026 சட்டசபை தேர்தலில் தீவிரமாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர்கள் சத்தியமூர்த்தி, அண்ணாதுரை, கனகராஜ், மாவட்ட பிரதிநிதி பெருமாள், வழக்கறிஞர் சங்க தலைவர் சேகர், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பிரகாஷ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தலைமை செயற்குழு உறுப்பினர் எத்திராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை