உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரிஷிவந்தியத்தில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்

ரிஷிவந்தியத்தில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியத்தில் மத்திய அரசை கண்டித்து தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன்தலைமை தாங்கினார். அவர் ஆர்ப்பாட்டத்தில் பேசியதாவது:தென் இந்தியாவில் இருந்து ஜி.எஸ்.டி., வரி வசூலித்து, வட இந்தியாவில் செலவழிக்கின்றனர். முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி காலத்தில் இருந்து மும்மொழி கொள்கையை தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. ஆனால், இந்தி மொழியை திணிக்க, தமிழகத்திற்கு கல்விக்காக தர வேண்டிய ரூ.2,400 கோடியை தராமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தை கூட இடம் பெறவில்லை. மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ரூ.4 ஆயிரம் கோடியை தராமல் நிறுத்தி வைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இதில் ஒன்றிய செயலாளர் பெருமாள், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமி சுப்ரமணியன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர்.மேலும், ஊராட்சி தலைவர்கள் வினிதா மகேந்திரன், கிருஷ்ணபிரசாத், கிளை செயலாளர்கள் சிவமுருகன், செல்வகுமார், நிர்வாகிகள் துரைராஜ், இதயதுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல, ஒன்றிய செயலாளர் பாரதிதாசன் தலைமையில் ஜம்படையில் தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ