உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போதை ஆசாமி பிளேடால் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு

போதை ஆசாமி பிளேடால் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அடுத்த புல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் மகன் அழகேசன், 35; சென்னையில் தங்கி கூலி வேலை செய்கிறார். தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் வந்தார். நேற்று முன்தினம் இரவு அழகேசன் மது போதையில் மனைவியிடம் தகராறு செய்தார். அப்போது அழகேசன, கையில் வைத்திருந்த பிளேடால் தன்னை தானே கழுத்தை பிளேடால் அறுத்து கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை