உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உலர்களமான நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அவதி

உலர்களமான நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அவதி

சங்கராபுரம் : சங்கராபுரம் சாலையில் மக்காசோளத்தை காய வைப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சங்கராபுரம் பகுதியில் அரசம்பட்டு, பாலப்பட்டு, தும்பை, பாச்சேரி, பாவலம், மல்லாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் மக்காசோளத்தை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். தற்போது பயிர்கள் நன்கு வளர்ந்து தயார் நிலையில் உள்ள நிலையில் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. கிராமங்களில் அறுவடை செய்யப்படும் மக்காசோளத்தை காய வைப்பதற்கு போதிய உலர்களம் இல்லாததால் விவசாயிகள் நெடுஞ்சாலைகளில் கொட்டி காயவைக்கின்றனர். இதனால், இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. அதனால், சாலைகள் உலர்களமாக பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டு சங்கராபுரம் பகுதியில் தேவையான இடங்களில் உலர்களம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை