மேலும் செய்திகள்
விலை அறிவிப்புகள்
29-May-2025
உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே முட்டை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து, 6.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான முட்டைகள் உடைந்து சேதமாகின. நாமக்கல்லை சேர்ந்தவர் நடேசன், 34; டிரைவர். இவர், நாமக்கலில் இருந்து, 6.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1.50 லட்சம் முட்டைகளை, ஐச்சர் லாரியில் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி நேற்று வந்து கொண்டிருந்தார். அதிகாலை 3:00 மணியளவில், உளுந்துார்பேட்டை வெள்ளையூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.டிரைவர் நடேசன், காயங்களோடு தப்பினார். அப்பகுதி மக்கள், சாலையில் திடீரென குவிந்து, பாதி உடைந்த நிலையில் இருந்த முட்டைகளை அள்ளிச் சென்றனர்.உளுந்துார்பேட்டை போலீசார், லாரியை அப்புறப்படுத்தி விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.
29-May-2025