உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு பஸ் மோதி மூதாட்டி பலி

அரசு பஸ் மோதி மூதாட்டி பலி

கள்ளக்குறிச்சி : சாலையை கடக்க முயன்ற மூதாட்டி, அரசு பஸ் மோதி இறந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனார் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாசாமி மனைவி கேசம்மாள்,60; இவர், நேற்று மாலை 4:00 மணிக்கு உறவினரை பார்ப்பதற்காக கள்ளக்குறிச்சி வந்துள்ளார். கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு அருகே சாலையை கடக்க முயன்றபோது, பஸ் நிலையத்தில் இருந்து சேலத்திற்கு புறப்பட்ட அரசு பஸ் மோதியது. அதில் படுகாயமடைந்த மூதாட்டி கேசம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை