உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வழுக்கி விழுந்த மூதாட்டி பலி

வழுக்கி விழுந்த மூதாட்டி பலி

கச்சிராயபாளையம்; தெங்கியாநத்தம் கிராமத்தில் தவறி விழுந்த மூதாட்டி இறந்தார். கச்சிராயபாளையம் அடுத்த தெங்கியாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி மல்லிகா, 70; இவர் ஒராண்டாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி வீட்டு வாசலில் கீழே விழுந்து மயங்கினார். அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 10 மணிக்கு மல்லிகா இறந்தார். இது குறித்து கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை