உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெயருடன் பிறப்புச் சான்று பெற கால அவகாசம் நீட்டிப்பு

பெயருடன் பிறப்புச் சான்று பெற கால அவகாசம் நீட்டிப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தையின் பெயரின்றி பிறப்பு மட்டும் பதிவு செய்துள்ளவர்களுக்கு, பெயருடன் கூடிய பிறப்பு சான்று பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:பிறப்பு பதிவு சான்று என்பது குழந்தைகளுக்கான முதல் உரிமை மற்றும் சட்டபூர்வ குடியுரிமைக்கான சான்று. பள்ளியில் சேரவும், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், விசா பெறுதல் உள்ளிட்டவைகளுக்கு பிறப்பு சான்று முக்கிய ஆவணமாக உள்ளது. சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையானதாகும்.குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்திருப்பின், பிறப்பு சான்றிதழை இலவசமாக பெறலாம். பெயர் இல்லாமல் பிறப்பு மட்டும் பதிவு செய்திருப்பின், பதிவு செய்த நாளிலில் இருந்து, 12 மாதத்திற்குள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்மந்தப்பட்ட பதிவாளரிடம் அளித்து கட்டணமின்றி குழந்தையின் பெயரை பதிவு செய்யலாம். 12 மாதங்களில் இருந்து 15 ஆண்டுகளுக்குள் 200 ரூபாய் தாமத கட்டணம் செலுத்தி பெயரை பதிவு செய்யலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் பெயர் பதிவு செய்ய முடியாது.இந்திய தலைமை பிறப்பு, இறப்பு பதிவாளர் அறிவுரையின்படி, கடந்த 2000ம் ஆண்டுக்கு முன் மற்றும் 2000ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு 15 ஆண்டுகள் வரை பெயரின்றி பதிவு செய்யப்பட்ட பிறப்புகளுக்கும், பெயர் வைத்து பிறப்பு சான்று பெற நடப்பாண்டு டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி, பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி, மாநகராட்சி, தாலுகா, பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து பிறப்பு சான்று பெற விண்ணப்பிக்கலாம். இனிவரும் காலங்களில் கால அவகாசம் நீட்டிக்கப்படாது. எனவே, மாவட்டத்தில் குழந்தை பெயரை பதிவு செய்யாமல் இருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை