உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் 1,200 லிட்டர், சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர்.கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா, கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் கல்வராயன்மலை பகுதியில் இருவேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர்.கீழ்கொட்டாய் கிழக்கு ஓடை மற்றும் கண்ணுார் கிராமம் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊறல்கள் 1,200 லிட்டர் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பேரல்களில் வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல்களை சம்பவ இடத்திலேயே போலீசார் கொட்டி அழித்து, தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ