/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முன்னாள் படைவீரரின் குடும்பத்தினர் தையல் இயந்திரம் பெற வலியுறுத்தல்
முன்னாள் படைவீரரின் குடும்பத்தினர் தையல் இயந்திரம் பெற வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னாள் படைவீரரின் குடும்பத்தினர் இலவச தையல் இயந்திரம் பெற வரும் 20ம் தேதிக்குள் பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு: முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண்கள் மற்றும் திருமணமாகாத மகள்கள் இலவச தையல் இயந்திரம் பெற வரும் 20ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற்பயிற்சி முடித்து சான்று பெற்றவர்கள் உரிய சான்றுகளுடன் தங்களது பெயரினை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகி வரும் 20க்குள் பதிய வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.