உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

தியாகதுருகம் :தியாகதுருகத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தியாகதுருகம் வேளாண் துறை சார்பில் நடந்த கூட்டத்திற்கு ஆத்மா திட்ட தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன், உதவி வேளாண் அலுவலர் அமிர்தலிங்கம், தொழில்நுட்ப மேலாளர் சூர்யா முன்னிலை வகித்தனர். வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) ரகுராமன் வரவேற்றார். வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி, விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானிய திட்டம், விவசாய அடையாள எண் பதிவு செய்வதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். தியாகதுருகம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி