உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகன் மாயம் தந்தை புகார் 

மகன் மாயம் தந்தை புகார் 

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாயமான மகனை கண்டுபிடித்து தரக்கோரி தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமாந்துாரை சேர்ந்தவர் பாண்டியன் மகன் பாரத்குமார், 22; ஏ.சி., மெக்கானிக். கடந்த 11ம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், மாயமான தனது மகன் பாரத்குமாரை கண்டுபிடித்து தரக்கோரி, பாண்டியன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி